Family Man Ajith: விஜய் - திரிஷா சர்ச்சை ஒருபுறம்.. ஃபேமிலிதான்பா ஃபர்ஸ்ட்.. அஜித் குறித்து ஆதிக் சொன்ன தகவல்



ஃபேமிலி மேன் அஜித்: 

தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருப்பது விஜயின் குடும்பம் தொடர்பான வதந்தி தான். அவருடைய மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இது பற்றி தான் தற்போது இணையவாசிகள் விவாதித்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விஜய் திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில் அதற்கு நேர் மாறாக ஃபேமிலி மேன் என்ற பெயரோடு அஜித் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

ஒரு விருது வழங்கும் விழாவில் அஜித்தை பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்து கொண்ட தகவல் தான் இப்போது ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒன்றாக நடித்திருந்தார். அந்த சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக ஆதிக் நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே ஆதிக் இரண்டு படங்களை இயக்கியிருந்தார்.

ஃபேமிலிதான் முக்கியம்:

ஆனால் அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவு போகவில்லை. நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழங்கிய அறிவுரையினால் தான் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி தன்னை தேடி வந்ததாகும் இந்த வெற்றிக்கு அஜித்தும் ஒரு முக்கிய காரணம் என்றும் ஆதிக் பகிர்ந்து இருந்தார். அது மட்டுமல்ல அஜித்தின் தீவிர ரசிகரும் கூட. இந்த நிலையில் அந்த விருது வழங்கும் விழாவில் ஆதிக் கூறியதாவது: 

அஜித் சாருக்கு எப்போதுமே அவருடைய ஃபேமிலிதான் ஃபர்ஸ்ட். மத்ததெல்லாம் அப்புறம்தான். சூட்டிங்கில் இருக்கும் போது கூட ஃபேமிலிக்கு என தனியாக நேரத்தை ஒதுக்கிவிடுவார். ஃபேமிலிக்கு முக்கியத்துவம் கொடுங்க என இருப்பவர்களுக்கும் அறிவுரை கூறுவார். அவருக்கு முதலில் ஃபேமிலிதான் முக்கியம். அதன் பிறகுதான் வேலை, ரேஸ் எல்லாம் என ஆதிக் கூறியுள்ளார்.

ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்:

இதிலிருந்து அஜித்தின் முன்னுரிமை எப்பொழுதுமே ஃபேமிலி தான் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அது மட்டுமல்ல தனது ரேஸ் இதர பொழுதுபோக்குகளை விட தனது குடும்பத்திற்குத் தான் முதலிடம் கொடுக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு பக்கம் மற்ற நடிகர்களின் குடும்ப வாழ்க்கை பற்றி பலவித சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் அஜித்தின் இந்த தெளிவான கொள்கை அவரது ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சினிமா என்பது தொழில் மட்டுமே. வாழ்க்கை என்பது குடும்பத்தை சார்ந்தது என்பதில் அஜித் தெளிவாக இருக்கிறார் என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அஜித்தை வைத்து ஆதி குட்பேட்அக்லி என்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த நிலையில் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். அது எப்போது ஆரம்பிக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை. அந்த படத்தின் அப்டேட்காகத்தான் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Post a Comment

0 Comments