தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில் அவரைப் பற்றி ஆதரவான மற்றும் எதிர்ப்பு கலந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியிலிருந்து சமீபத்தில் ரஞ்சனா நாச்சியார் விலகிய நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
சர்ச்சையை கிளப்பிய ரஞ்சனா:
ஒரு பொதுக்கூட்டத்தில் விஜய் அவரைச் சுற்றி பரவி வரும் சர்ச்சைகளுக்கு சூசகமாக தனது கருத்தை பதிவு செய்தார். அதாவது நீங்கள் நினைக்கிற அளவுக்கு இந்த பிரச்சனை எல்லாம் வொர்த்தே கிடையாது என்று கூறியிருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு ரஞ்சனா நாச்சியார் விஜய்யின் இந்த கருத்துக்கு தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அந்த கட்சியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரஞ்சனா நாச்சியார், விஜய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் மது அருந்தாமல் அவரால் இருக்கவே முடியாது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அது மட்டுமல்ல பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட மது அருந்திவிட்டு தான் பேசுவார் என்று அவர் கூறியது இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
கண்டனம் தெரிவித்த தொண்டர்கள்:
இதற்கு ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மற்றும் அவருடைய கட்சி தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஞ்சனா நாச்சியாரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகரும் மற்றும் இயக்குனருமான அனுமோகன் முன்பு அளித்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகின்றது. விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
இப்படிப்பட்டவரா விஜய்?:
அந்த பழைய பேட்டியில் விஜயின் ஒழுக்கம் பற்றி அனுமோகன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் சாருடன் ஒரு படப்பிடிப்பில் நான் இருந்தபோது சிகரெட் பிடித்து விட்டு அவரிடம் பேச சென்றேன். அவர் மென்மையாக, எனக்கு சிகரெட் வாசனை ஒத்துக்காது. அதுமட்டுமில்லாமல் உடம்புக்கு இது நல்லதும் கிடையாது.. முடிஞ்ச வரைக்கும் இதை விட்டுருங்க சார் என அக்கறையோடு அட்வைஸ் செய்தார் என அந்த பழைய பேட்டியில் அனுமோகன் கூறியுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு சக கலைஞர்களின் உடல் நலனில் அக்கறை காட்டும் ஒருவர் மீது இந்த மாதிரி அவதூறு பரப்புவது முறையல்ல என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


0 Comments