பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம்:
தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகளை நாம் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக ஒரு வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் குஷ்பூ மற்றும் சுந்தர் சி. குஷ்பூவை வைத்து ‘முறைமாமன்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அதிலிருந்து குஷ்பூவுடன் காதல் வயப்பட்டார் சுந்தர் சி. அந்த திரைப்படம் தான் இவர்களுடைய காதலுக்கும் திருமணத்திற்கும் பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம்.
மீனாதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்:
ஆனால் இந்தப் படத்தில் தான் நடித்தது ஒரு எதிர்பாராத திருப்பம் என ஒரு பேட்டியில் குஷ்பூ கூறியுள்ளார். சுந்தர் சி இயக்குனராக முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் முறைமாமன். நகைச்சுவை கலந்த ஒரு காமெடி திரைப்படமாக அது அமைந்தது. அந்த படத்தில் குஷ்புவுக்கு முன்பு சுந்தர் சி மீனாவை அந்த படத்தில் நடிக்க வைக்க நினைத்திருந்தாராம். மீனாவின் நடிப்பு அவருடைய அழகு இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என சுந்தர் சியின் எண்ணமாக இருந்திருக்கிறது.
ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் மீனாவை விட குஷ்பூதான் இந்த படத்தில் கச்சிதமாக பொருந்துவார் என பிடிவாதமாக இருந்துள்ளார். வேறு வழியின்றி குஷ்பூவை அணுகி இருக்கிறார் சுந்தர் சி.
குஷ்பூ பகிர்ந்த தகவல்:
இதைப் பற்றி குஷ்பூ ஒரு பேட்டியில் கூறும் பொழுது, இந்த படத்தின் கதையை சுந்தர் சி என்னிடம் சொல்ல வரும் பொழுது அரை மனதோடு தான் வந்தார். ஏனெனில் அவருடைய மனதில் மீனாதான் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தது. ஒரு இயக்குனராக மீனாவை தான் அவர் ஆரம்பத்தில் இருந்து நினைத்தார். தயாரிப்பாளர் சொன்னார் என்பதற்காக தான் என்னை அவர் அப்ரோச் செய்தார் என குஷ்பு கூறி இருக்கிறார்.
கடைசியில் எந்த நடிகையை படத்தில் நடிக்க வைக்க தயங்கினாரோ அவரே சுந்தர் சியின் வாழ்க்கை துணைவியாக வந்தது விதி என குஷ்பூ மிகவும் நகைச்சுவை உணர்வோடு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவளையா வேண்டாம் என சொல்ற? கடைசி வரை ‘இவள்தான் உனக்கு’ என கடவுள் அப்போதே முடிவு செய்துவிட்டார் என ன் நெகிழ்ச்சியுடன் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஒரு பவர்ஃபுல் தம்பதிகளாகவும் உருவாக காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments