எவர்கிரீன் நாயகி:
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இளவரசி என்றாலே அது திரிஷாதான் என்று சொல்லுமளவுக்கு அவருடைய குந்தவை கேரக்டர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸான சமயத்தில் திரிஷா ஏற்றிருந்த குந்தவை கேரக்டர்தான் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அந்தளவுக்கு அவருடைய கொண்டை, ஆபரணங்கள் என நிஜ இளவரசியாக அந்தப் படத்தில் தோன்றியிருந்தார் திரிஷா. அதுமட்டுமில்லாமல் அந்தப் படம் வெளியான நேரத்தில் குந்தவை கேரக்டரை ரீ கிரியேட் செய்து பல பேர் அதை சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கினர். சமீபத்தில் கூட குந்தவை என்ற பெயர் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.
குந்தவை ‘குந்த’வை:
ஒரு விழா மேடையில் குந்தவையை ஒரு இடத்தில் குந்த வைத்தால் நல்லது என பார்த்திபன் விளையாட்டாக சொன்னது இன்று பெரும் பூகம்பமாக கிளம்பியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க குந்தவை கெட்டப்பை சமீபத்தில் ஒரு ரசிகர் தனது நாய்க்கு போட்டு அழகு பார்த்த புகைப்படத்தை பகிர அதை பார்த்த திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாகவே திரிஷா செல்லப்பிராணிகள் மீது அதிக பாசமும் அக்கறையும் கொண்டவர். குறிப்பாக நாய் என்றால் திரிஷாவுக்கு கொள்ளைப் பிரியம். அதனால் அந்த ரசிகர் பகிர்ந்த புகைப்படத்தை திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். மனிதர்களை தாண்டி இப்போது செல்லப்பிராணிகளை வைத்தும் ரீ கிரியேட் செய்வது மிகவும் டிரெண்டாகி வருகிறது.
திரிஷா பற்றிய சர்ச்சை:
இதை பார்த்த நெட்டிசன்கள் கடைசியில் குந்தவையை இப்படி மாற்றிவிட்டார்களே என கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். திரிஷாவின் சர்ச்சை பற்றிய செய்தி ஒரு பக்கம் இருந்தாலும் இப்படி நாள் தோறும் வித்தியாசமான பதிவுகளை பகிர்ந்து தான் கேஷுவலாக இருப்பதாக த்ரிஷா காட்டிக் கொள்கிறார்.



0 Comments