Vijay Politics: 6, 7 பேரை வைத்து மட்டும் ஜெயிக்க முடியாது.. விஜயை விமர்சித்த மோகன் ஜி

vijay

விஜயின் அரசியல் நகர்வு: 

 தமிழக அரசியல் களத்தில் விஜயின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து வருகிறார்கள். எப்படியாவது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை விட ஆளும் கட்சியை தரைமட்டதோடு ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பொது குழு கூட்டத்தை நடத்தி மக்களின் ஆதரவுகளையும் திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஒரு நேர்காணலில் பேசும்பொழுது விஜய் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதை விட தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்படுவதே சரியான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைக்கும் முயற்சியில் பவன் கல்யாண் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

எது புத்திசாலித்தனம்?

இந்த நிலையில் மோகன் ஜியின் இந்த கருத்தும் இப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது வெறும் ஆறு அல்லது ஏழு தெரிந்த முகங்களை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பது புத்திசாலித்தனமாக இருக்காது. அப்படி செய்தால் யாரோ ஒருவரை 500 அல்லது ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கத்தான் அது வழி வகுக்கும்.

அதைவிட தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்து செயல்படுவது புத்திசாலித்தனமாக இருக்கும். அது மட்டுமல்ல இது நடந்தால் மக்களுக்கும் நல்லது என தெரிவித்துள்ளார். மோகன் ஜியின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்ல சினிமா வட்டாரங்களிலும் ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த நேரத்தில் இருந்து அவருடைய அரசியல் பயணம் என்பது தனி பாதையாக இருக்குமா அல்லது கூட்டணி பாதையாக இருக்குமா என்பதுதான் பல பேரின் கேள்வியாக இருந்து வந்தது.

சலசலப்பை ஏற்படுத்திய மோகன் ஜியின் கருத்து:

இன்று வரை அது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இதற்கிடையில் மோகன் ஜியின் இந்த ஒரு கருத்து தமிழக வெற்றி கழகத் தொண்டர்களிடையே ஒரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments