Youth Movie Review: மாறனின் மனதை மாற்றிய கென் கருணாஸ்! யூத் பட விமர்சனம் இதோ!

 

youth movie

நேற்று நடிகர் கருணாஸின் மகனும் நடிகருமான கென் கருணாஸ் நடிப்பில் யூத்  படம் வெளியானது. இந்த படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை விமர்சித்து அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். ரசிகர்களை பொறுத்த வரைக்கும் படத்தை அவர்கள் தியேட்டரில் போய் பார்த்தாலும் ப்ளூ சட்டை மாறன் எப்போது இந்த படத்தை விமர்சிப்பார் என அனைவரும் ஆர்வமுடன் காத்திருப்பார்கள்.

விமர்சித்த புளூசட்டை மாறன்: 

அந்த அளவுக்கு தன்னுடைய நையாண்டி கிண்டல் கலந்த கலவையில் ஒரு படத்தைப் பற்றி விமர்சிப்பது தான் அவருடைய வழக்கம். ஆனால் யூத் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் எதிர்பாராத விதமாக பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

படம் குறித்து அவர் கூறுகையில், முதல் பாதி வழக்கமான ஒரு டீன் ஏஜ் லவ் ஸ்டோரி போலத்தான் நகர்கிறது. கதாநாயகனை பொருத்தவரை அவருடைய லட்சியமே எப்படியாவது பள்ளியில் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும். கல்லூரியிலும் அந்தப் பெண்ணை காதலிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் அந்தப் பெண் தனக்கு துணைவியாக வரவேண்டும் என்பதுதான். இதுதான் கதையா என்றால் இல்லை.

முதல் பாதி சொதப்பல்:

முதல் பாதி கொஞ்சம் சொதப்பலாகவே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என தனது வழக்கமான பாணியில் இந்த படத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தார் ப்ளூ சட்டை மாறன். இருந்தாலும் இரண்டாம் பாதியில் காதல் எமோஷன் காமெடி என வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாக பாராட்டியுள்ளார். தந்தை மகன் இடையேயான அந்த எமோஷனல் பிணைப்பு மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தை ஒரு முழு குடும்ப படமாக பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். நடிகராக இயக்குனராக கென் கருணாஸ் ஸ்கோர் செய்துவிட்டார் என்றும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் சிம்பு மாதிரி குரங்கு வித்தை காட்டாமல் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை மட்டும் தவிர்த்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

youth movie

ஸ்கோர் செய்த கென் கருனாஸ்:

இரண்டாம் பாதியில் உள்ள அந்த எமோஷன் சென்டிமென்ட் இதை முதல் பாதியில் இருந்து கோர்வையாக கொண்டு வந்திருந்தால் இன்னும் இந்த படம் சிறப்பாக வந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். முதல் பாதியில் சில குறைகள் இருந்தாலும் இரண்டாம் பாதியில் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் உணர்வுபூர்வமாக இந்த படத்தை நகர்த்தி இருக்கிறார். முதல் முயற்சியிலேயே கென் கருணாஸ் பாஸாகிவிட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார் .முதல் நாளில் சுமார் 3.20 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments