Youth Movie Review: கென் கருணாஸின் ‘யூத்’ படம் எப்படி இருக்கு? இயக்குனராக ஹீரோவா ஸ்கோர் செய்தாரா?

Youth Movie Review

நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் யூத். இந்த படத்தை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். இதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் கென் கருணாஸ்.

கதைகளம்

பள்ளி பருவம் முடிவதற்குள் எப்படியாவது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கென் கருணாஸ் இருக்கிறார். இந்த இலக்கில் அவர் சந்திக்கும் பல பெண்கள் அதனால் ஏற்படும் காதல் தோல்விகள் இறுதியில் அவர் என்ன கற்றுக் கொண்டார் என்பதை விளக்கும் ஒரு படம் தான் இந்த யூத். முதல் படத்திலேயே கென் கருணாஸின் நடிப்பு நடனம் ஆக்சன் என ஒரு கமர்சியல் ஹீரோவுக்கு தேவையான அனைத்துமே சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

படத்திற்கு ப்ளஸ்:

அதிலும் குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் மெருகேற்றி இருக்கிறார் கென் கருணாஸ். படத்தின் முதல் பாதி முழுவதும் காமெடி, பள்ளி பருவம் அப்போது செய்யும் லூட்டிகள் என ரசிக்கும்படியாக இருக்கின்றன. அனுபவம் மிக்க நடிகர்களின் நடிப்பும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதில் ஹீரோயினாக அனிஷ்மா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சிறை படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷின் இசை பாடல்கள் பின்னணி இசை என வழக்கம்போல இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

மைனஸ்:

 துள்ளுவதோ இளமை.3 போன்ற படங்களை அவ்வப்போது இந்த யூத் திரைப்படம் ஞாபகப்படுத்துகிறது. திரைக்கதையில் இன்னும் புதுமையை சேர்த்து இருக்கலாம். இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு மெதுவாக இருப்பதை போல தோன்றலாம்.

youth movie

படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக பாடல்களில் கேமரா கோணங்கள் பாடலின் வேகத்திற்கு ஈடு கொடுத்துள்ளன. ஜிவி பிரகாஷின் இசை வழக்கம் போல படத்திற்கு கூடுதல் வலுவை சேர்த்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் சம்பளம் வாங்கவில்லை என்பதுதான் கோடம்பாக்கத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

1 Comments

  1. இளமைக்குரிய உணர்வுகளையும் அதன் தவறுகளையும் நேர்த்தியாக பதிவு செய்ய முயன்றிருக்கிறது போல தெரிகிறது. முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் கென் கருணாஸ் எடுத்த இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
    விமர்சனமும் படத்தின் பலமும் பலவீனங்களும் சமநிலையாக சொல்லியுள்ளது

    ReplyDelete