மே மாதம் படம் ரிலீஸ்?
தமிழ் சினிமாவில் அடுத்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சூர்யாவின் நடிப்பில் இதற்கு முன் வெளியான கங்குவா, ரெட்ரோ போன்ற திரைப்படங்கள் சரியான வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. அதனால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கோடம்பாக்கத்தில் இந்த படம் மே மாதம் வெளியாகும் என உறுதியாக கூறி வருகிறார்கள்.
பெரிய தொகை:
கடந்த சில மாதங்களாகவே மே மாதம் கண்டிப்பாக இந்த திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. கோடைகால விடுமுறை காலத்தை கருத்தில் கொண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போதைய சூழலில் இந்த படம் மே மாதம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது என்ற அளவிற்கு நிலைமை சாதகமாகியுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பொதுவாக பெரிய பட்ஜெட் அல்லது பெரிய நடிகர்களின் படங்களை முன்கூட்டியே மிகப்பெரிய தொகை கொடுத்து அதனுடைய டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி விடுவார்கள்.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விதித்த கண்டீசன்:
அதனால் இந்தப் படத்திற்கும் பெரிய அளவில் தொகை பேசப்பட்டு இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆரம்பத்தில் கருப்பு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை 75 லிருந்து 80 கோடி ரூபாய் வரை இருக்கும் என படக்குழுவினர் முதல் அனைவருமே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் netflix நிறுவனம் முதற்கட்டமாக 35 கோடி ரூபாய்க்கு மட்டுமே கையெழுத்து ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. மீதமுள்ள தொகையை பெறுவதற்கு ஒரு நிபந்தனையை netflix நிறுவனம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது படம் தியேட்டர்களில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூல் சாதனை படைக்கிறதோ அதை பொறுத்து கூடுதல் தொகை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
ஆனால் அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றால் கூடுதலாக 60 இலிருந்து 65 கோடி ரூபாய் மட்டுமே நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் என்றும் தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக கருப்பு திரைப்படம் தியேட்டர்களில் வெற்றியை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. ஏனெனில் தியேட்டர் வசூல் சிறப்பாக இருந்தால் மட்டுமே பட குழுவினர் எதிர்பார்த்த முழு டிஜிட்டல் உரிமை தொகை கைக்கு வரும் என்பதனால் தான். அதனால் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் இந்த படத்தை எதிர்பார்த்து மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

0 Comments