Vijay: இயக்குனரை அலைய வைத்த நடிகை! உடனே பேக்கப் செய்த விஜய்.. ‘நிலாவே வா’ பட ரகசியம்

vijay

தமிழ் சினிமாவில் பொறுமைக்கும் அமைதிக்கும் இலக்கணமாக திகழ்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாக அவர் கோபத்தில் என்னெல்லாம் பண்ணுகிறார் என்பதை பற்றி சமூக வலைதளங்களில் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே விஜய்க்கு  கோபம் வந்துவிட்டால் என்ன பண்ணுவார் என்பதை பற்றி அவரை வைத்து பகவதி படத்தை இயக்கிய வெங்கடேசன் கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியது: 

ஷூட்டிங்கில் இழுபறி:

விஜயை வைத்து  ‘நிலாவே வா’ திரைப்படத்தை நான் இயக்கினேன். அந்த படத்தின் ஷூட்டிங் நாகர்கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ரகுவரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடிகையை நாங்கள் தேர்வு செய்தோம். அவர் ஹைதராபாத்தில் இருந்தார். அங்கிருந்து அவர் நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு கார் மூலமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். இதில் என்ன விஷயம் எனில் அந்த காரில் ஏசி இல்லை. அந்த நடிகை வளர்ந்து வரும் நடிகை என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உதவியாளர்கள் ஏசி இல்லாத காரை எடுத்துக்கொண்டு அந்த நடிகையை கூப்பிட போய்விட்டார்கள்.

அந்த நடிகையும் அதே காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டார். இங்கு நான் ரகுவரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக ஸ்பாட்டுக்கு அந்த நடிகை வரவில்லை. நான் அந்த நடிகையை நேரில் போய் பார்த்தபோது எனக்கு சோர்வாக இருக்கிறது, தலை வலிக்கிறது. நாளைக்கு ஏன் ஷூட்டிங் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டார். ரகுவரனுடைய கால்ஷீட் இன்றுடன் முடிவடைகிறது. அதனால் கண்டிப்பாக இன்றே இந்த காட்சியை எடுக்க வேண்டும் என கூறினேன்.

ஓவர் ஆட்டிட்யூட் காட்டிய நடிகை:

சரி போங்க நான் வருகிறேன் என அந்த நடிகை கூறிவிட்டார். நானும் வந்துவிட்டேன். ஆனால் சொன்னபடி அந்த நடிகை ஸ்பாட்டுக்கு வரவில்லை. மறுபடியும் நான் போனேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட வசனங்கள் மிகவும் நீளமாக இருக்கிறது, என்னால் பேச முடியாது எனக் கேட்டார். அதற்கும் நான் இல்லை, கொஞ்சம் கொஞ்சம் பேசுங்கள். நான் சரி செய்து கொள்கிறேன் என ஒவ்வொரு முறையும் அந்த நடிகையை கன்வின்ஸ் செய்து கொண்டே இருந்தேன். ஆனாலும் அந்த நடிகை ஸ்பாட்டுக்கு வரவில்லை.

இதை முக்கால் மணி நேரமாக விஜய் கவனித்துக் கொண்டே இருந்தார். அதன் பிறகு என்னை கூப்பிட்டு என்ன நடக்கிறது என கேட்டார். நான் சொன்னேன். ஒரு இயக்குனராக இருந்து கொண்டு இப்படி அலைந்து கொண்டிருக்கிறீர்களே? அந்த நடிகை என்ன பெரிய இதுவா என்ற தொனியில் விஜய் கேட்டார். அதன் பிறகு, சரி காரில் ஏறுங்கள் என என்னை அழைத்துக் கொண்டு நாகர்கோயிலில் இருக்கும் ஒரு எஸ்டிடி பூத்துக்கு சென்றார். அங்கு அவருடைய தந்தைக்கு போன் செய்து நடந்தவற்றை கூறினார். அதன் பிறகு என்னிடம் சந்திரசேகர் பேசினார்.

தடாலடியாக இறங்கிய விஜய்:

உடனே அந்த நடிகையை பேக்கப் செய்து அனுப்பி விடுங்கள். வேறொரு நடிகை கமிட் செய்யுங்கள் என கூறினார். ஏனெனில் இந்த படத்திற்கு தயாரிப்பாளரே விஜய் தான். அவருடைய தந்தை கண்காணிப்பின் பேரில் விஜய் இந்த படத்தை தயாரித்தார். அதனால் அந்த நடிகையை நாங்கள் பேக்கப் செய்துவிட்டு அதன் பிறகு தான் சங்கவி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதுதான் விஜயின் குணம். கோபம் வந்துவிட்டால் அவருடைய வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்.

vijay

முக்கால் மணி நேரமாக நடந்தவற்றை அப்படியே கவனித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு என்ன பண்ணலாம் என யோசிப்பார். தடாலடியாக என இறங்க மாட்டார். இதுதான் அவருடைய கோபத்தின் வெளிப்பாடாக இருக்கும் என இயக்குனர் வெங்கடேசன் கூறியுள்ளார்.




Post a Comment

0 Comments