Vijay Latest: எல் சி யு என்ற வார்த்தை கைதி, விக்ரம் இந்த இரண்டு படங்களில் இருந்து தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. இந்த இரண்டு படங்களுமே ஒரு inter connect worldஐ உருவாக்கியது. ட்ரக், மாபியா, சீக்ரெட் ஏஜென்ட், மறைமுகமாக செயல்படும் நெட்வொர்க் என இந்த இரண்டு படங்களிலும் சில ஒற்றுமையான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து வெளியான லியோ படத்தின் டிரைலரிலும் இதே மாதிரியான ஒரு டோன் இருந்தது. அதனால் தான் லியோ திரைப்படமும் எல் சி யு கனெக்ஷனில் வருமா என ஒரு ஹைப்பை ஏற்படுத்தியது. லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இது எல்சியூ படமா இல்லையா என்ற ஒரு பெரிய கேள்வியை ரசிகர்களிடம் உருவாக்கியது.
தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ட்ரெண்டை உருவாக்கியதும் இந்த எல் சி யு கான்செப்ட் தான். ஆனால் லியோ திரைப்படம் இந்த யுனிவர்சில் சரியாக பிட் ஆகவில்லை என்பதுதான் உண்மை.
லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு எல் சி யு பற்றிய ஒரு எதிர்பார்ப்பை மெயின்டெயின் பண்ண வைத்தது, ஆனால் அதைப் பற்றிய ஒரு தெளிவான தகவல் கொடுக்கவில்லை. ரசிகர்களிடம் ஒரு கியூரியாசிட்டியை ஏற்படுத்தினார்கள். இது முழுக்க முழுக்க மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜியாகவே பார்க்கப்பட்டது.
0 Comments