எஸ்.ஏ.சி உருக்கம்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் விஜய். இன்று அடுத்த கட்டமாக அரசியலில் விஸ்வரூபம் எடுத்து வருகிறார். எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் எனக்கு தன்னுடைய மகன் இன்னும் அதே சிறு வயது ஜோசப் விஜய் தான் என ஒரு பேட்டியில் எஸ்ஏசி பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் தனக்கும் விஜய்க்கும் இருக்கும் நெருக்கத்தைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார் எஸ் ஏ சி.
அம்மா பிள்ளை:
பொதுவாக பசங்களை பொருத்தவரைக்கும் அம்மாவுடன் தான் அதிகமாக நெருக்கமாக இருப்பார்கள். ஆனால் விஜய் அப்படி கிடையாது. அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அதை போல எனக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்த பாசத்தை நாங்கள் இருவரும் ஒருபோதும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை. ஒரு பிள்ளைனு ஆண்டவன் எழுதிட்டான். அதனால் என்னவோ அவன் மேல பாசத்தை வச்சுட்டோம் என எஸ் ஏ சி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
விஜயை அடித்த எஸ்.ஏ.சி:
விஜயின் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தையும் எஸ் ஏ சி தற்போது நினைவுகூர்ந்து உள்ளார். ஒருமுறை விஜய் தேர்வில் மார்க் குறைவாக வாங்கியதற்காக கோபத்தில் ஒரு ஸ்கேலை அடித்து விஜய்யை அடித்து விட்டாராம். ஆனால் அடுத்த கணமே எண்ணெய்யை எடுத்து நானே தடவி விட்டேன் என்றும் தன்னுடைய பழைய நினைவுகளை எஸ் ஏ சி அதில் பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு பார்வை;
விஜயை பொறுத்த வரைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு தளபதியாக இன்று உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய கண்களுக்கு அவர் இன்றும் ஒரு மாறாத குழந்தையாகவே தான் தெரிகிறார் என உருக்கமாக பகிர்ந்து உள்ளார் எஸ் ஏ சி. தந்தை மகன் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எஸ்ஏசியின் இந்த பாசமான பேச்சு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது .வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஜய்யும் எஸ்ஏசியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் ஆற தழுவி தங்களுடைய பாசத்தை வெளிப்படுத்தி இருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
0 Comments