Vijay Divorce: இது கேவலமான நிகழ்ச்சி! தவெக மகளிர் தின விழாவை விமர்சித்த அமீர்

vijay
அமீர் வைக்கும் கருத்து:

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தீவிரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு விஜய் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் விஜய் அரசியலில் குதித்த பிறகு இயக்குனர் அமீர் தொடர்ந்து விஜய் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். 

சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டங்கள், துயர சம்பவங்களை சுட்டிக்காட்டி அமீர் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மக்களின் உயிரையும் மதிக்காமல் ஒரு சினிமா நட்சத்திரமாகவே விஜய் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் என்றெல்லாம் பேசினார். இந்த நிலையில் இன்று தவெக கட்சி சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட இருக்கிறது.

கேவலமான நிகழ்ச்சி:

இதைப் பற்றியும் அமீர் அவருடைய கருத்தை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார். அதில் தமிழகத்தில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டிருக்கிறார். மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவது ஒரு கேவலமான நிகழ்ச்சி என கூறியிருக்கிறார். இதுவும் இப்போது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை  ஏற்படுத்தியிருக்கிறது. 

இன்னொரு பக்கம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து அறிக்கைக்கு பிறகு சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒன்றாக ஒரே காரில் ஒரே உடையில் வந்தது அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன் விஜய் ரசிகர்களுக்கே பெரிய ஷாக்காக இருந்தது. சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர்களே ஏமாற்றத்துடன் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

25 வருட திருமண வாழ்க்கை:

இந்த நிலையில் மகளிர் தின விழாவை விஜய் தலைமையில் அவருடைய கட்சி இன்று நடத்துகிறார்கள். அதனால் விவாகரத்து பிரச்சினை ஒரு பக்கம், திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து வந்தது ஒரு பக்கம் என மகளிர் தின விழாவை நடத்த இவருக்கு என தகுதி இருக்கிறது என்றெல்லாம் பல பேர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் சங்கீதா தரப்பில் மட்டும் இருந்து ஆராயாமல் விஜய் பக்கமும் இருந்து யோசிக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 25 வருட திருமண வாழ்க்கை. சந்தோஷமான குடும்பம், அழகான குழந்தைகள் என வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்த விஜய். இப்போது அந்த வாழ்க்கையில் இப்படியொரு பிரச்சினை எனும் போது உண்மையில் என்ன நடந்தது என அந்த இருவருக்கு மட்டுமே தெரியும். அதனால் வெளியில் நடப்பதை வைத்து மட்டும் விஜய் மீது நாம் தவறான பார்வையை வைக்கக் கூடாது. இருந்தாலும் எப்படியாவது விஜய் சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டுமென விஜய் ரசிகர் முட்டி போட்டு கோயிலில் உலா வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. இதுக்கு விஜய் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

0 Comments