Legend Saravanan: ஒரு கேமியோ இருந்தா சொல்லுங்க! நெல்சனிடம் கோரிக்கை வைத்த லெஜெண்ட்

nelson

 தமிழ் சினிமாவில் இப்போது பெரிய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறி இருப்பவர் நெல்சன். குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இயக்குனரும் கூட. குறிப்பாக ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இவருடைய அடுத்த அடுத்த படங்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் நெல்சனிடம் வைத்த ஒரு கோரிக்கை பற்றிய தகவல் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

எதிர்பார்ப்பை கிளப்பிய நெல்சன்:

பொதுவாகவே நெல்சன் திரைப்படங்களை பொருத்தவரைக்கும் நகைச்சுவை மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக கமல் மற்றும் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் நெல்சன். இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

மேடையை யூஸ் பண்ண லெஜெண்ட்:

இந்த நிலையில் சமீபத்திய ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் லெஜெண்ட் சரவணன் நெல்சனை பற்றி ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். லெஜெண்ட் சரவணனிடம் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டபோது கொஞ்சம் கூட யோசிக்காமல் நெல்சன் என பதிலளித்தார். அது மட்டுமல்ல இப்போது அவர்தான் டாப்பில் இருக்கும் இயக்குனர்.

போகிற போக்கை பார்த்தால் இன்னும் ஐந்து வருடங்கள் அவரை பிடிக்க முடியாது போல. அந்த அளவுக்கு பிசியாக இருக்கிறார். அவருடைய படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோல் இருந்தால் சொல்லுங்கள். இரண்டு மூன்று நாட்கள் நடித்து கொடுக்கிறேன் என நெல்சனிடம் தன்னுடைய அன்பான கோரிக்கையை வைத்துள்ளார் லெஜன்ட் சரவணன். தி லெஜன்ட் படத்திற்கு பிறகு சரவணன் தன்னுடைய அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார்.

rajinikamal

நெல்சன் செய்வாரா?

அதற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றி ஜிம் வீடியோக்கள் மற்றும் ஸ்டைலிஷான போட்டோசூட்கள் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறது. லெஜெண்ட் சரவணன் இதை சொன்னதும் ரஜினி கமல் இவர்களை வைத்து எடுக்கும் படத்தில் நெல்சன் சரவணனுக்காக ஏதாவது கேமியோ ரோல் வைப்பாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments